கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம் ?

0 3757
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்பட்டு இருப்பதாக வெளியாகி உள்ள தகவல், ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்பட்டு இருப்பதாக வெளியாகி உள்ள தகவல், ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் குறுஞ்செய்தியை அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது.

அதில், தமிழகத்திலுள்ள மாநில தலைமை கூட்டுறவு வங்கி, 23 மத்திய கூட்டுறவு வங்கிகள், 128 நகர கூட்டுறவு வங்கிகள், 4250 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் நகைக்கடன் வழங்குவதை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நகைக்கடன் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும், மீண்டும் நகைக்கடன் வழங்கப்படுவது எப்போது தொடங்கும் என்றும் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments