ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் வெளியீடு

0 5694
கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வரும் நிலையில், அவற்றுக்கான சில கட்டுப்பாடுகளை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வரும் நிலையில், அவற்றுக்கான சில கட்டுப்பாடுகளை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மழலையர் பள்ளிகளுக்கான ஆன்லைன் வகுப்புகளை ஒரு நாளில் 30 நிமிடங்களுக்கு மட்டுமே நடத்த வேண்டும்.1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு நாளில், 45 நிமிடங்களுக்கு மிகாமல் 2 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு நாளில் 4 ஆன்லைன் வகுப்புகள் 45 நிமிடங்கள் மிகாமல்  இருக்க வேண்டும். இந்த கட்டுப்பாட்டு விதிகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments