பாட்னா எய்ம்ஸ்-ல் மனிதர்களிடம் கோவாக்சின் சோதனை

இந்தியாவின் முதலாவது கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை மனிதர்களிடம் சோதித்துப் பாக்கும் நடைமுறை பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் துவங்கியுள்ளது.
10 பேரிடம் இந்த சோதனை நடத்தப்படுகிறது. அவர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளதாகவும், 14 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுளது. சோதனை காலம் முடிந்த பின்னர் அவர்களுக்கு தடுப்பூசியால் ஏதாவது பின்விளைவு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்படும்.
கோவாக்சினை மனிதர்களிடம் சோதிக்க, ஐசிஎம்ஆர் தேர்வு செய்த 12 மையங்களில் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையும் ஒன்றாகும். முதல் கட்டமாக 2 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் கூறியுள்ளது.
Patna #AIIMS to start human trial of #coronavirus vaccine on 18 volunteers from July 13https://t.co/yOQ7IMmoV7
— Zee News English (@ZeeNewsEnglish) July 13, 2020
Comments