போதைப்பொருள் கடத்தல் மண்டலமாக நம் நாடு பயன்படுத்தப்படுகிறதா? உயர்நீதிமன்றம் கேள்வி

0 966

போதைப்பொருள் கடத்தல் மண்டலமாக நம் நாடு பயன்படுத்தப்படுகிறதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பான ஆட்கொணர்வு மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் மத்திய, மாநில அளவிலான போதை பொருள் தடுப்பு பிரிவுகளை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக நீதிபதிகள் சேர்த்தனர்.

போதைப்பொருள் கடத்தலை வேரறுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன?, போதைப்பொருள் தொடர்புடைய வழக்குகள் மற்றும் குற்றங்களை கையாள ஏன் தனிப்பிரிவை உருவாக்க கூடாது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். இது தொடர்பாக 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு விசாரணை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments