நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை

0 2228

நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா இருப்பதாக சமூகவலைதளங்களில் பரவி வரும் செய்திகளுக்கு அவரது செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் தனிமைபடுத்தப்பட்டு இருப்பதாகவும் சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்து அவருடைய செய்தித் தொடர்பாளர் ரியாஸ் கே. அகமது ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ரஜினிக்கு கொரோனா என்கிற செய்தி பொய் என்றும், இக்கட்டான தருணத்தில் இதுபோன்ற செய்திகளை பரப்புவதை நிறுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments