மம்தா அரசை கலைக்க வலியுறுத்தி குடியரசு தலைவரிடம் பாஜக மனு

0 1809

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசு அரசியல் படுகொலைகளை நடத்துவதாகவும், அதனால் அவரது அரசை கலைக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்து பாஜக தலைவர்கள் மனு அளித்தனர்.

மாநில பாஜக கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரும் எம்எல்ஏவுமான தேபேந்திர நாத் ராய் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள தமது வீட்டருகே மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இது அரசியல் கொலை என்று குற்றஞ்சாட்டியுள்ள பாஜக, மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரியுள்ளது. இந்த நிலையில் இன்று, பாஜக பொதுச் செயலர் கைலாஷ் விஜய்வர்கியா, எம்.பி. ராஜு பிஸ்டா உள்ளிட்டோர் குடியரசு தலைவரை சந்தித்து மனு அளித்தனர். மேற்கு வங்கத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 105 பாஜகவினர் கொல்லப்பட்டுள்ளதாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments