கொரோனா தாக்கத்தால், வாகன விற்பனை வீழ்ச்சி..!

0 1642

கொரோனா தாக்கத்தால், கடந்த மாதம் பயணியர் கார் விற்பனை , கடந்த வருட ஜூன் மாத விற்பனையை விடவும் 57.98 சதவிகிதம் குறைந்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதே போன்று பல்வகை பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை 31.16 சதவிகிதமும், வேன்களின் விற்பனை 62.06 சதவிகிதமும் குறைந்து விட்டதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. 2019 ஜூன் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது, கடந்த மாதம் இரு சக்கர வாகன விற்பனை 38.56 சதவிகிதம் குறைந்துள்ளது.

ஆட்டோ ரிக்சாக்களின் விற்பனை 80.15 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்தமாதம் பயணியர் கார் ஏற்றுமதியும் 56.31 சதவிகித சரிவை சந்தித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments