மாதம் ரூ.1 கோடி வரை சம்பாதித்த விகாஸ் துபே.. ஆடம்பரமாக வாழாத நிலையில் பணத்தை செலவிட்டது எப்படி..?

0 13150

என்கவுன்டரில் கொல்லப்பட்ட தாதா விகாஸ் துபே, மாதம் 1 கோடி ரூபாய் சம்பாதித்ததாகவும், அதை எப்படி அவன் செலவிட்டான் என்பது குறித்து அமலாக்கத் துறை விசாரிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட அவனை, மத்திய பிரதேசத்தில் இருந்து பிடித்து உத்தரபிரதேச மாநிலம் கான்பூருக்கு 10ம் தேதி அழைத்து வரப்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டான்.

இந்நிலையில் அமலாக்கத்துறையை மேற்கோள்காட்டி ஹிந்துஸ்தான் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், மாதம் 90 லட்சம் முதல் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் வரை துபே சம்பாதித்ததாகவும், ஆனால் சாதாரண உடையோடு வாழ்ந்ததாகவும், வங்கி கணக்குகளிலும் போதிய பணமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்தோடு புகை பழக்கம், மதுபானம் போன்ற பழக்கங்களும் அவனுக்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து கூட்டாளிகள் வங்கி கணக்குகள், பிற பரிவர்த்தனைகள், துபேக்கு நெருக்கமான தொழிலதிபர் போன்ற நிதி முதலீட்டாளர்கள் குறித்து அமலாக்கத் துறையினர் விசாரிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments