ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

0 688
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம் பூஞ்ச் மாவட்டத்தில் அரசு பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம் பூஞ்ச் மாவட்டத்தில் அரசு பேருந்து போக்குவரத்து  மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மூன்றரை மாதங்களாக பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு தரப்பினரும் போக்குவரத்து தொடர்பான பிரச்னைகளை எதிர்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் பேருந்து சேவைக்கு மாவட்ட நிர்வாகம் சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து பூஞ்ச் மாவட்டத்தில் மீண்டும் பேருந்து சேவை தொடங்கியுள்ளது. இதையடுத்து சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் அணிந்த நிலையிலும் பயணிகள் மீண்டும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments