இந்தியாவில் வாழும் ஒரே ஒரு தங்கநிறப் புலி படம் பிடிக்கப்பட்டது

0 9175

அஸ்ஸாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் இந்தியாவில் உள்ள ஒரே ஒரு தங்கநிறப் புலி படம் பிடிக்கப்பட்டுள்ளது.

கப்பல் நிறுவன மேலாளரும், வனஉயிரின புகைப்பட நிபுணருமான மயூரேஷ் ஹென்றி என்பவர் காசிரங்கா வனப்பகுதியில் சுற்றி வந்தபோது இந்தப் புலியைப் படம் பிடித்துள்ளார். அரிதினும் அரிதாகக் காணப்படும் இந்தப் புலி தற்போது இந்தியாவில் ஒன்று மட்டுமே உள்ளது.

சாதாரண புலிகளை விட வெளிறிய பழுப்பு நிறத்தில் காணப்படும் இந்தப் புலி, மற்றவைகளை விட முக அமைப்பும் சற்று மாறுபாடு கொண்டது. டாபி புலி என்றும் ஸ்ட்ராபெரி புலி என்றும் அழைக்கப்படும் இது, உடலில் கருப்பு நிறக் கோடுகளுக்குப் பதிலாக சிவப்பு மற்றும் பழுப்பு நிறக் கோடுகளையும், பொன்னிறமான ரோமங்களையும் கொண்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments