கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக சிங்கப்பூரில் இருந்து 10 இந்தியர்கள் வெளியேற்றம்

0 1157

கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக சிங்கப்பூரில் இருந்து 10 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அங்கு கொரோனாவுக்கு 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் 26 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம், ஓராண்டு வரை சிறை உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் சிங்கப்பூரில் கிம் கீட் சாலையில் வசித்த நவ்தீப் சிங் என்பவரின் குடும்பத்தினர் தங்கள் வீட்டு விருந்து நிகழ்ச்சிக்கு கல்வி மற்றும் பணி விசாவில் உள்ள ஒரு பெண் உள்ளிட்ட 7 பேரை அழைத்த நிலையில் மொத்தம் 10 பேர் கொரோனா பாதுகாப்பு விதிகளுக்கு மாறாக கூட்டம் சேர்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் மீண்டும் நாட்டுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments