எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

0 1355

எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்திய, சீனா நாடுகளிடையே ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.

லடாக் மோதலுக்குப் பின்னர் கிழக்கு லடாக்கில் இருக்கும் சுஷுல் என்ற இடத்தில் இந்த சந்திப்பு நடைபெறவிருக்கிறது. இது லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் உள்ள ராணுவ அதிகாரிகளும் நடத்தும் நான்காவது சுற்று பேச்சுவார்த்தையாகும்.

இதற்கு முன்பாக நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் கால்வான் பள்ளத்தாக்கில் உள்ள துருப்புக்களை சீனா விலக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று பாங்காங் சொ பகுதியில் பிங்கர் ஃபோர் என்ற இடத்திலும் துருப்புகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.

இன்றைய பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறும் பட்சத்தில் மேலும் சில பகுதிகளில் இருந்து இருதரப்பு ராணுவ வீரர்களும் விலக்கிக் கொள்ளப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments