ஜூலை 14 - 22 : பெங்களூருவில் ஒரு வாரம் முழு ஊரடங்கு

0 1953

கொரோனா பரவலை தடுக்க பெங்களூருவில் இன்று இரவு முதல் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

அத்தியாவசியப் பொருட்கள் கடைகள் காலை 5 முதல் நண்பகல் 12 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படும். அரசு பேருந்துகள், மெட்ரோ ரயில் சேவை, டாக்சி, ஆட்டோ, செயலி சார்ந்த வாகன சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

விதிகளின் படி அனுமதிக்கப்பட்ட வாகனங்களும், அவசர வாகனங்களும் மட்டும் அனுமதிக்கப்படும், ஏற்கனவே அட்டவணையிடப்பட்ட விமானங்கள், ரயில்களை மட்டும் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது உணவகங்களில் பார்சல்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜூலை 22க்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படாது என முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments