ராஜஸ்தானில் இன்று மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..பங்கேற்க முடியாது என சச்சின் பைலட் திட்டவட்டம்..!

0 2328

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் அரசுக்கு அதிக எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், இன்று நடைபெறும் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தியதை அடுத்து, முதலமைச்சர் அசோக் கெலாட் இல்லத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 107 எம்எல்ஏக்கள் கலந்துகொண்டதாகவும், தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் முதலமைச்சர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சச்சின் பைலட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த கட்சித் தலைமை தயாராக இருப்பதாக, ஜெய்ப்பூர் வந்துள்ள மேலிடப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், சச்சின் பைலட்டை 20க்கும் குறைவான எம்.எல்.ஏ.க்கள் ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது. அவரை சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முயன்று வருகின்றனர். 

டெல்லியில் முகாமிட்டுள்ள சச்சின்பைலட் உடனடியாக ஜெய்ப்பூருக்குத் திரும்பவேண்டும் என ராகுல் மற்றும் பிரியங்கா தொலைபேசியில் கேட்டுக் கொண்டனர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெறுகிறது. இந்த கூட்டத்தையும் புறக்கணிக்கப் போவதாக சச்சின் அறிவித்துள்ளதால் அங்கு குழப்பநிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் பாஜகவில் சேரப்போவதில்லை என சச்சின் பைலட் அறிவித்துள்ளதால் தனிக்கட்சி தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments