மருத்துவ மேல்படிப்புகளில் ஓ.பி.சிக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உத்தரவு

0 1192

மருத்துவ மேல் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக் கீடு வழங்குவது தொடர்பான மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், 1994 - ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி, 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனு, இன்று விசார ணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு மற்றும் எதிர்க் கட்சிகள் தாக்கல் செய்திருந்த மனுக்களை உயர் நீதிமன்றம் விசாரிக்க அனுமதி அளித்தார்.

மருத்துவ படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு தமிழகம் அளிக்கும் இடங்களில் தமிழகத்தைச்சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, தமிழக அரசு மற்றும் அதிமுக, திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளன.

இதனிடையே, மருத்துவ மேல் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன் றத்தில் தலைமை நீதிபதி ஏ.பி ஷா தலைமையிலான அமர்வு முன், வருகிற வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments