காதலித்த இளைஞரைத் திருமணம் செய்து வைக்காததால் 17 வயது மாணவி தற்கொலை!

0 7020

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் காதலித்த இளைஞருடன் திருமணம் செய்து வைக்காததால், 12 - ம் வகுப்பு மாணவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் - சேலம் ரோடு பகுதியைச் சேர்ந்த விவசாயி ராம்ராஜ். இவர் குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் பார்த்து வருகிறார். இவரது மகள் லாவண்யா, 12 - ம் வகுப்பு முடித்துள்ளார். பள்ளியில் படிக்கும் போதே கட்டுமானத் தொழிலாளி பிரபு என்பவருடன் பழகி காதல் வளர்த்து வந்தார் லாவண்யா. தற்போது, பள்ளிப்படிப்பு முடிந்த நிலையில் பிரபுவையே திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று பெற்றோரிடம் வலியுறுத்தி வந்தார். லாவண்யாவுக்கு 18 வயது இன்னும் முடிவடையாத நிலையில், ‘பதினெட்டு வயது முடிந்ததும் திருமணம் செய்து வைக்கிறேன்’ என்று சொல்லியுள்ளனர் லாவண்யாவின் பெற்றோர்.

ஆனால், பெற்றோர் சொல் மீது நம்பிக்கை இல்லாத லாவண்யா, ‘உடனடியாகத் திருமணம் செய்து வையுங்கள்’ என்று அவ்வப்போது தகராறில் ஈடுபட்டார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்பட்டது. திருமணம் செய்து வைக்காததால் விரக்தியிலிருந்த லாவண்யா, வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து கையைக் கத்தியால் அறுத்துக்கொண்டு, வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தையும் குடித்து விட்டார்.

வேலைக்குச் சென்ற பெற்றோர் வீடு திரும்பியதும் ரத்த வெள்ளத்தில், மயங்கிப் போய் வாயில் நுரைதள்ளிய நிலையில் கிடந்த மகளைப் பார்த்துப் பதறிப்போனார்கள். உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த மாணவியைத் தூக்கிக்கொண்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மாணவியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

திருமணம் செய்து வைக்காத விரக்தியில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments