ஊதியத்தை உயர்த்த அரசு மருத்துவர்கள் கோரிக்கை..!

0 1842
ஊதியத்தை உயர்த்த அரசு மருத்துவர்கள் கோரிக்கை

2009ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையின் படி ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

செவ்வாயன்று முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் விடுத்துள்ள கோரிக்கையில், 2009ஆம் ஆண்டில் நிதித் துறையின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட அரசாணை 354 இன் படி உரிய ஊதியம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதைச் செயல்படுத்துவதால், அரசுக்கு மாதத்திற்குக் கூடுதலாக 20 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும் எனக் குறிப்பிட்டுள்ளனர். அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்க வேண்டும் என்றும், இதன் மூலம் மருத்துவர்கள் இன்னும் ஊக்கத்துடன் பணி செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments