ஆசிரியர்களை கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்த மாநகராட்சி முடிவு

0 2384

கொரோனா தடுப்புப் பணிகளில் மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்தத் தடை விதிக்கக் கோரிய வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கொரோனா தடுப்புப் பணிகளில் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த முடிவெடுத்துச் சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது. இதற்குத் தடை விதிக்கக் கோரி ஆசிரியர்கள் சங்கம் தொடுத்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட ஆசிரியை தொற்றால் பாதிக்கப்பட்டுக் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளதாக மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர்களைக் களப்பணிக்கு அனுப்புவது இல்லை என்றும், தன்னார்வலர்களை ஒருங்கிணைத்துக் கண்காணிக்கும் பணியைத்தான் மேற்கொள்வதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

பேரிடர்க் காலத்தில் ஆசிரியர்களின் சேவையை எதிர்பார்ப்பதாகவும், அவர்களுக்கும் நாட்டின் மீது அக்கறை இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்குப் போதிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்து, ஆசிரியர்களைப் பணிகளில் ஈடுபடுத்தத் தடை கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments