மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அன்றாடப்பணிகளை தொடரும் அமிதாப்

0 1908

கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது அன்றாட பணிகளை தொடர்ந்து வருகிறார்.

மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், தனது ரசிகர்களுடன் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்பில் இருந்து வருகிறார்.

தனது அதிகாரப் பூர்வ இணையதளப்பக்கத்தில் ரசிகர்கள் இருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ள அமிதாப் பச்சன், தானும், ஐஸ்வர்யா, ஆராத்யா, அபிஷேக் உள்ளிட்டோரும் விரைவில் நலம் பெற வேண்டிய, அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

பச்சன் குடும்பத்தினரின் 4 பங்களாக்களும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதோடு, 30க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments