அரசு ஊழியர்கள் காலை 10.30 மணிக்குள் அலுவலகம் வந்திருக்க வேண்டும் - முதன்மை செயலாளர்

0 4961

அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள கோப்புகளை விரைந்து முடிக்க ஏதுவாக, வாரத்தில் 6 நாட்கள் பணிக்கு வர ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ஊரக வளர்ச்சி மற்றும் நகர் பஞ்சாயத்து துறைக்கு கீழ் வரும் அனைத்து அலுவலகங்களுக்கும் முதன்மை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள கோப்புகளுக்கான பணிகளை முடிக்க வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இன்று முதல் காலை 10.30 மணிக்குள் ஊழியர்கள் அலுவலகங்களுக்குள் வந்திருக்க வேண்டும்  எனவும், ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதை கணக்கெடுத்து நாள்தோறும் அறிக்கையாக தயார் செய்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறைக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments