இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 53 ஆயிரத்து 471 ஆக உயர்வு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆயிரத்து 701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை, இன்று காலை 9 மணி நிலவரப்படி, 8 லட்சத்து 78 ஆயிரத்து 254 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 174 ஆகவும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 503 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 53 ஆயிரத்து 471 ஆகவும், சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3 லட்சத்து ஆயிரத்து 609 ஆகவும் உள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு பட்டியலில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரத்தில், தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 54 ஆயிரத்தை கடந்துள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ள நிலையில், மூன்றாம் இடத்தில் உள்ள டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதனிடையே, நேற்று வரை 1 கோடியே 18 லட்சத்திற்கும் பரிசோதனைகள் (1,18,06,256)செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 103 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
#CoronaVirusUpdates: #COVID19 India Tracker
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) July 13, 2020
(As on 13 July, 2020, 08:00 AM)
▶️ Confirmed cases: 878,254
▶️ Active cases: 301,609
▶️ Cured/Discharged/Migrated: 553,471
▶️ Deaths: 23,174#IndiaFightsCorona#StayHome #StaySafe @ICMRDELHI
Via @MoHFW_INDIA pic.twitter.com/oRaqoIaX4s
Comments