"இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம்"பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தல்

0 41841

கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என, பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்டு உள்ள செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த வேண்டும் என்ற, முடிவை திரும்பப்பெற வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

இந்நிலையில், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வது என்பது மாணவர்களுக்கான நலனாக இருக்காது எனவும், தேர்வுகளை நடத்துவது என்பதே மாணவர்களின் வாழ்நாள் முழுவதற்குமான நன்மை எனவும் பல்கலைக் கழக மானியக் குழு விளக்கமளித்துள்ளது.

மேலும், ஏற்கனவே வழங்கப்பட்ட வழிகாட்டுதலின்படி, ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என தங்களுக்கு ஏற்ற வசதியில் பல்கலைக் கழகங்கள் தேர்வுகளை நடத்த அனுமதிக்கப்படும் எனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இந்த வலியுறுத்தல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 155 நிறுவனங்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments