கிணற்றில் விழுந்தவரை மீட்கும் முயற்சி.. தீயணைப்பு வீரர் உயிரிழப்பு..!

0 7636

பெரம்பலூர் அருகே வெடிவைத்த இடத்தில் ஊற்று தோன்றியதா என பார்ப்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய இளைஞரும், அவரை மீட்க சென்ற தீயணைப்பு வீரர் ஒருவரும் உயிரிழக்க வெடிமருந்தின் நெடி காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்லியம்பாளையம் கிராமத்தில் மனோகரன் என்பவரது விவசாய கிணற்றை ஆழப்படுத்தும் பணியின் போது, ஞாயிறு காலை கிணற்றுக்குள் வெடி வைக்கப்பட்டது. பிற்பகலுக்கு மேல் ஊற்று தோன்றியதா என பார்ப்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய இளைஞர் ராதாகிருஷ்ணன், நீண்ட நேரமாகியும் மேலே வரவில்லை.

அவரை மீட்க சென்ற பாஸ்கர் என்பவரும் மேலே வராததால், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ராஜ்குமார், தனபால், பால்ராஜ் ஆகியோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அவர்களும் கிணற்றுக்குள்ளேயே மயக்கமடைந்த நிலையில், மற்றொரு தீயணைப்பு குழுவினர் வந்து முதலில் இரு வீரர்களையும், பாஸ்கரையும் மீட்டனர். தொடர்ந்து மீட்கப்பட்ட தீயணைப்பு வீரர் ராஜ்குமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

நீண்ட போராட்டத்துக்கு பிறகு முதலில் கிணற்றுக்குள் இறங்கிய இளைஞரின் உடல் மீட்கப்பட்டது. இது  தொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments