உச்சத்தில் உட்கட்சிப் பூசல் -பாஜகவில் சேருவாரா சச்சின் பைலட் ?

0 5472

ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் 30 ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் இன்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் அக்கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அசோக் கெலாட்டின் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து மைனாரிட்டி அரசாகிவிட்டதாக சச்சின் பைலட் தெரிவித்துளளார்.

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இடையே உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சச்சின் பைலட் பகிரங்கமாக மோதலை தொடங்கி உள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு முதலமைச்சர் அசோக் கெலாட் அவசரமாக எம்.எல்.ஏக்களை கூட்டி ஆலோசனை நடத்தினார். இதில் சுமார் 75 எம்.எல்.ஏக்கள் கலந்துக் கொண்டனர். ஆனால் இக்கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சச்சின் பைலட்டும் அவருடைய ஆதரவு எம்.எல்,ஏக்களும் இக்கூட்டத்தைப் புறக்கணித்தனர். இன்று காலை நடைபெறும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்துக் கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொறடா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில், காங்கிரஸ் மேலிடப் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

இந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாகவும், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் சச்சின் பைலட்டின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சச்சின் பைலட்டும் அவருடைய ஆதரவாளர்களான 30 எம்.எல்.ஏக்களும், பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை சச்சின் பைலட் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார்.

200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில் காங்கிரசுக்கு 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.மேலும் 18 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் அக்கட்சிக்கு 125 பேர் ஆதரவு இருக்கிறது. பாஜகவுக்கு 72 எம்.எல்.ஏக்களும் மூன்று இதர கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் ஆதரவும் உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments