தங்க கடத்தல் விவகாரம் - கேரள அரசு மீது நட்டா குற்றச்சாட்டு..!

0 2618

தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் அலுவலகத்திற்கும் தொடர்பு இருப்பதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா குற்றம் சாட்டி உள்ளார்.

கேரள பாஜக தொண்டர்களிடம் காணொலி வாயிலாக உரையாற்றிய அவர், கேரள முதலமைச்சரின் செயலருக்கும் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள ஐ.டி. துறை ஊழியருக்கும் உள்ள தொடர்பு குறித்து கேள்வி எழுப்பினார்.

தங்க கடத்தல் விசாரணையில் யாரையும் விட்டு விடக் கூடாது என பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதை சுட்டிக்காட்டிய நட்டா, அப்படியானால் அதில் கேரள முதலமைச்சரின் அலுவலகத்திற்கும் பங்கு இருக்கிறது என்று தானே பொருள் எனவும் வினவினார்.

கொரோனா தொற்று விவகாரத்திலும், கேரள அரசு குழப்பம் ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டிய அவர், எதிர்மறையான எண்ணத்துடன் கேரள அரசு கொரோனா விவகாரத்தை கையாளுவதாவும் கண்டனம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments