ராஜஸ்தான் காங்கிரஸில் கலகம் - தங்களுக்கு தொடர்பு இல்லை என பாஜக விளக்கம்

0 2495

அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் மாநில தலைவர் சச்சின் பைலட்டை பாஜக தலைவர்கள் யாரும் சந்திக்கவில்லை என்றும், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராஜஸ்தானில் முதலமைச்சரான அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சரான சச்சின் பைலட்டுக்கும் இடையே உள்ள பிரச்சனைக்கு பாஜகவை குற்றஞ்சாட்ட சிலர் முயற்சிப்பதாகவும், ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் எம்எல்ஏக்களை கட்சி மாற வைக்கும் எந்த செயலிலும் பாஜக ஈடுபடவில்லை எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே ஆதரவு எம்எல்ஏக்களுடன் சோனியா காந்தியை சந்திக்க சச்சின் பைலட் டெல்லி சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைமை எப்போது விழித்துக் கொள்ளும் என அதன் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments