மதுரையில் முழுஊரடங்கு மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு..!

0 41342

மதுரை மாநகராட்சியில் மேலும் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. சென்னையைத் தொடர்ந்து மதுரையில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால், தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு நள்ளிரவுடன் முடிவடையும் நிலையில், வருகிற 14ஆம் தேதி நள்ளிரவு வரை, நீட்டித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

இதுதவிர, வருகிற 15 ஆம் தேதி அதிகாலை 6 மணி முதல் 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என்று, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments