கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் வெற்றிகரமான போர் - அமித் ஷா பெருமிதம்

0 1753

கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா நடத்தும் வெற்றிகரமான போரை உலக நாடுகள் பாராட்டுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அரியானாவில் உள்ள காதர்பூர் கிராமத்தில் மத்திய ஆயுத படைகள் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பயிற்சி வளாகத்தில் மாபெரும் மரம் நடுதல் திட்டத்தை துவக்கி வைத்து அவர் பேசினார்.

மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடானா இந்தியா, கொரோனாவை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என உலக நாடுகள் சந்தேகப்பட்ட நிலையில், இந்தியா அதை வெற்றிகரமாக அடக்கி உள்ளதை பார்த்து வருகின்றன என அமித் ஷா குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய படையினரின் பங்களிப்பை பாராட்டிய அவர், தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல், மக்களின் உதவியுடன் கொரோனா போன்ற எதிரியையும் வெல்லும் திறன் வீரர்களுக்கு உள்ளதாக பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments