இந்திய ரயில்வே 100 சதவீதம் மின்மயமாக்கல் : பிரதமர் ஒப்புதல்

0 4055

இந்திய ரயில்வேயை நூறு சதவீதம் மின்மயமாக்குவதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்திய குளோபல் வீக் நிகழ்ச்சியில் வீடியோ கன்பிரன்சிங் வாயிலாக பங்கேற்றவர், நாட்டில் உள்ள சுமார் ஒரு லட்சத்து 20  ஆயிரம் கிலோ மீட்டர் நீளமான இருப்பு பாதைகளை, வரும் 2030 ம் ஆண்டிற்குள் முழுமையாக மின்மயமாக்கி, உலகின் முதல் நூறு சதவித பசுமை வழித்தட ரயில்வேயாக மாற்ற விரும்புவதாக குறிப்பிட்டு உள்ளார்.

கொரோனா பாதிப்பு குறித்து பேசிய பியூஷ் கோயல், வரலாற்று ரீதியாக இந்தியா பல்வேறு சவால்களை சந்தித்து உள்ளதால், கொரோனாவால் தற்போது நிலவும் சூழலில் இருந்து இந்தியா மீண்டு வருவதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments