தமிழகத்தில் மேலும் 3965 பேருக்கு கொரோனா

0 6751
தமிழ்நாட்டில் இன்று 3965 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, கொஞ்சம் இறங்கி வந்த நிலையில், வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதேநேரம், கொரோனாவின் பிடியில் இருந்து குணம் அடைந்து, சுமார் 86 ஆயிரம் பேர், வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 965 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 34 ஆயிரத்தை தாண்டி உள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 27 பேர், பிற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 31 பேர் உள்பட மொத்தம் 58 பேரும் கொரோனா பாதிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 3 ஆயிரத்து 600 பேர் குணம் அடைந்ததால், "டிஸ்சார்ஜ்" செய்யப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 86 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

ஒரே நாளில் சுமார் 38 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதனால், மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை சுமார் 15 லட்சத்து 67 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

சென்னையில் 26 பேர் உள்பட தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 69 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனைகளில் 5 பெண்கள் உள்பட 18 பேர் மரணம் அடைந்தனர். சென்னையைச்சேர்ந்த 24 வயது இளைஞர், காஞ்சியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் மற்றும் தமிழகம் முழுவதும்15 பெண்கள் உள்பட மொத்தம் 51 பேர், பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இறந்தனர்.

எனவே, தமிழகத்தில் கொரோனா உயிர்ப்பலி ஆயிரத்து 898 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பலி, பதிவாகி உள்ளது. இதேபோல, கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லாத ஒரு மாவட்டம் கூட, தமிழகத்தில் இல்லை என சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments