2018இல் புலிகள் குறித்த கணக்கெடுப்பை கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிப்பு

0 3067

இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டு புலிகளின் எண்ணிக்கை குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பு கின்னஸ் உலக சாதனை (Guinness World Record) புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவுகளில், புலிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்க மத்திய அரசு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே எட்டப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்.

இந்தியாவில் புலிகளை எண்ண கடைபிடிக்கப்பட்ட நடைமுறை வெற்றியடைந்துள்ளதாகவும், கேமரா மூலம் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வனவிலங்கு குறித்த கணக்கெடுப்பு என கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments