உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நன்றாக குணமடைந்து வருகிறார்: மியாட் மருத்துவமனை

0 2272

கொரோனாவில் இருந்து குணம் அடைந்து விட்டதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்று உறுதி ஆனதால், சென்னை - மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் கே.பி. அன்பழகன் தனி அறையில் தங்கி, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா சிகிச்சை நிலவரம் குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் கே.பி. அன்பழகன், தற்போது, தாம் ஓய்வு எடுத்து வருவதாக கூறியுள்ளார். அதேநேரம், உடல் நிலை மோசம் என வெளியான தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வருகிற 15 ஆம் தேதி, செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, பொறியியல் கலந்தாய்வு தொடர்பாக விளக்கம் அளிக்க உள்ளதாகவும் அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே. மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில், அமைச்சர் கே.பி. அன்பழகன் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வருவதாகவும், அவரது  உடல் நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, அமைச்சர் கே.பி. அன்பழகன் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மியாட் மருத்துவமனை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments