ரூ. 30,062 கோடி முதலீடு பெற்றது ரிலையன்ஸ்..!

0 7629

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஏற்கெனவே செய்துகொண்ட உடன்பாடுகளின்படி நான்கு நிறுவனங்களிடம் இருந்து முப்பதாயிரத்து 62 கோடி ரூபாயை முதலீடாகப் பெற்றுக்கொண்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெளிநாடுகளைச் சேர்ந்த 11 நிறுவனங்களிடம் இருந்து ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 588 கோடி ரூபாயை முதலீடாகப் பெற்றுக்கொண்டு அதன் 25 புள்ளி பூஜ்யம் ஒன்பது விழுக்காடு பங்குகளை விற்க உடன்பாடுகளைச் செய்திருந்தது.

இந்நிலையில் எல் கேட்டர்ட்டன், பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் பண்ட், சில்வர் லேக், ஜெனரல் அட்லாண்டிக் ஆகிய நான்கு நிறுவனங்களிடம் இருந்து முப்பதாயிரத்து 62 கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டு அவற்றுக்கு ஆறு புள்ளி ஒன்று மூன்று விழுக்காடு பங்குகளை ஒதுக்கியுள்ளதாக செபி அமைப்பில் ரிலையன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments