கனவில் வந்த லாட்டரி எண்... 15 வருடங்களுக்குப் பிறகு ரூ.5 கோடி ஜாக்பாட் பெற்ற பெண்!

0 26574

15 வருடங்களுக்கு முன்பு கனவில் கண்ட லாட்டரி டிக்கெட் எண் மூலம் 7,00,000 டாலர் ஜாக்பாட் பரிசைப் பெற்று அசத்தியுள்ளார், ஆஸ்திரேலிய பெண் ஒருவர். இந்தப் பரிசுத் தொகையானது இந்திய மதிப்பில் ஐந்து கோடிக்கும் மேல் அதிகம் ஆகும்.

ஆஸ்திரேலியா மாநிலம், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள ரெட்லேன்ட் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் எப்போதும் ஒரே எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டை மட்டுமே வாங்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். ஜூலை 6 - ம் தேதியும்  வழக்கம் போல அதே எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டை வாங்கிச் சென்றார். 15 வருடங்களுக்கு முன்பு வந்த கனவைப் போலவே அந்த நம்பர் மூலம் ஏழு லட்சம் டாலர் பம்பர் பரிசைப் பெற்றுள்ளார்.

வெற்றி பெற்றது குறித்து அந்தப் பெண் கூறியதாவது, "15 வருடங்களுக்கு முன்பு கனவு கண்டேன். அந்தக் கனவில் சில லாட்டரி டிக்கெட்டுகளின் எண்கள் தோன்றி மறைந்தன. கனவு கலைந்த பிறகும் அந்த எண்கள் என் நினைவில் அப்படியே இருந்தன. அவற்றைக் குறித்துவைத்துக்கொண்டேன். 10 வருடங்களுக்கும் மேலாக அந்த எண்களைப் பின்தொடர்ந்து வருகிறேன். எப்போது லாட்டரி டிக்கெட் வாங்கினாலும் அந்தக் குறிப்பிட்ட எண்ணில் தான் வாங்குவேன். அந்த எண் என்னை ஒருபோதும் ஏமாற்றியதில்லை. குறைந்த பட்ச பரிசுத் தொகையாவது எனக்குக் கிடைத்துவிடும். நான் கனவில் கண்டத்தைப் போலவே இந்த முறை லாட்டரியில் உச்சபட்ச பரிசான $ 7,00,000 ஜாக்பாட் பரிசைப் பெற்றுள்ளேன்" என்கிறார் மகிழ்ச்சியுடன்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments