சென்னையில் கொரோனாவிலிருந்து குணமாவோர் விகிதம் 74 சதவீதமாக உயர்வு

0 1725

சென்னையில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமானோரின் விகிதம் 74 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மாநகராட்சி நேற்று வெளியிட்ட புள்ளி விவரத்தில், அந்த விகிதம் 71 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தில் அந்த விகிதம் 3 சதவீதம் அதிகரித்து 74 சதவீதமாக உள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 969ஆக உயர்ந்துள்ளது.

இதில் 55,156 பேர் குணமாகியுள்ளனர். இதுதவிர்த்து 18, 616 பேர் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் நிலையில், 1,196 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 9,189 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,383 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதற்கடுத்து அதிகபட்சமாக அண்ணாநகரில் 2 ஆயிரத்து 75 பேர் (2075) சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதித்தோரில் 57 புள்ளி 59 சதவீதம் பேர் ஆண்கள், 42 புள்ளி 41 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments