ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள்களை மீட்க வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

0 1184

ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 40 பேரை விரைந்து மீட்டுவர நடவடிக்கை எடுக்குமாறு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , எழுதியுள்ள கடிதத்தில், ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்டுவர நடவடிக்கை எடுக்குமாறு, ஏற்கெனவே கடந்த மே மாதம் எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையடுத்து, கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் மூலம், 681 மீனவர்கள் கடந்த ஜூலை 1ஆம் தேதி பத்திரமாக தமிழகம் அழைத்து வரப்பட்டதற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

கப்பலில் போதிய இடமில்லாததால், 40 மீனவர்கள் ஈரானிலேயே பின்தங்கி விட்டனர் என்பதையும் தமது கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, அந்த 40 மீனவர்களையும் சிறப்பு விமானத்தின் மூலம் விரைவாக மீட்டுவர ஏற்பாடு செய்யுமாறு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments