அருணாசல பிரதேசத்தில் தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொலை

0 1383

அருணாசல பிரதேச மாநிலத்தில் இன்று காலை பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற சண்டையில் நேசனலிஸ்ட் சோசியலிஸ்ட் கவுன்சில் ஆப் நாகாலாந்து அமைப்பு  தீவிரவாதிகள்  6 பேர் கொல்லப்பட்டனர்.

லாங்டிங் கிராமத்தில் உள்ள வனபகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினரும், அருணாசல பிரதேச போலீசாரும் காலையில் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த என்எஸ்சிஎன் (NSCN -IM) எனப்படும் நேசனலிஸ்ட் சோசியலிஸ்ட் கவுன்சில் ஆப் நாகாலாந்து அமைப்பு தீவிரவாதிகளுடன் சண்டை நடைபெற்றது.

இந்த சண்டையில் அசாம் ரைபிள்ஸ் படை வீரர் ஒருவரும் காயமடைந்தார். தீவிரவாதிகளிடம் இருந்து 4 ஏ.கே.47 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments