கிழக்கு லடாக்கில் படைகள் வாபஸ் இந்தியா-சீனா சுமுக பேச்சுவார்த்தை

0 2267

லடாக்கின் கிழக்கு எல்லைப்பகுதியில் இருந்து படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ள இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

எல்லையில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த பதற்ற நிலை தற்போது தணிந்துவிட்டது. கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் 20 பேர் சீனாவால் கொல்லப்பட்டதையடுத்து இருநாடுகளுக்கும் இடையிலான பதற்றம் உச்சத்தை எட்டியது. சீனாவுக்கும் கடும் உயிர்ச்சேதம் ஏற்பட்ட போதும் அந்நாடு அதனை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை.

சீனாவின் படைக்குவிப்பை அடுத்து இந்தியாவின் சுகோய், மிக் உள்ளிட்ட வலிமையான போர் விமானங்கள், ஏவுகணைகள், படைகள் எல்லையை நோக்கி நகர்த்தப்பட்டதால் அங்கு மிகவும் பதற்றமான நிலைமை நீடித்து வந்தது. இதனைத் தணிப்பதற்காக இருநாடுகளும் ராணுவ மட்டத்திலும் அதிகாரிகள் மட்டத்திலும் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகளின் பலனாக எல்லையில் அமைதியைக் காக்கவும் முழு அளவில் வெளிப்படையாக நடந்துக் கொள்ளவும் சீனா ஒப்புக் கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நேற்று வெளியுறவுத்துறை கூடுதல் செயலர் தலைமையில் சீனா வெளியுறவு அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் எல்லையில் இருந்து படைகளை முழு அளவில் விலக்கிக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன. சர்ச்சைக்குள்ளான மூன்று இடங்களில் இருந்து கடந்த சில நாட்களில் சீனப்படைகள் பின்வாங்கியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments