தமிழகத்தில் மேலும் 3680 பேருக்கு கொரோனா

0 5674

தமிழகம் முழுவதும் சுமார் 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா சிகிச்சை முடிந்து, வீடு திரும்பி உள்ளனர். அதேநேரம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.

தமிழகத்தில் உச்சம் எட்டிய கொரோனா பாதிப்பு, மெல்ல குறைய துவங்கி உள்ளது. ஒரே நாளில் புதிதாக 3 ஆயிரத்து 680 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட் டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டி விட்டது. இவர்களில், 19 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என்றும், 25 பேர் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் என்றும் சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 46 ஆயிரம் பேர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கு மத்தியில், ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், கொரோனாவில் இருந்து குணம் அடைந்து, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 82 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கையை 101 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

சென்னையில் 27 பேர் உள்பட தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 64 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் ஒன்றரை வயது ஆண் குழந்தை மற்றும் 5 பெண்கள் உள்பட மொத்தம் 17 பேர் மரணம் அடைந்தனர். அரசு மருத்துவமனைகளை பொறுத்தவரை, 15 பெண்கள் உள்பட 47 பேர், உயிரிழந்தனர். எனவே, தமிழகத்தில் கொரோனா உயிர்ப்பலி ஆயிரத்து 829 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments