கர்நாடக முதலமைச்சரின் அரசு இல்லத்தில் பணியாளர்களுக்கு கொரோனா

0 1287

தமது அதிகாரப்பூர்வ அலுவலகம் மற்றும் இல்லமான கிருஷ்ணாவில் சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  தமது மற்றோரு அரசு இல்லமான காவேரியில் இருந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

தாம் ஆரோக்கியமாக இருப்பதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ள அவர், தமது உடல் நிலை குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்கள், அரசு வெளியிடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ள எடியூரப்பா, அதிகாரப்பூர்வ பணிகளை காணொலி காட்சி வாயிலாக நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments