தொலைத் தொடர்புக்கான புதிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய சீனா

0 1578

தொலை தொடர்புக்கான புதிய செயற்கைக்கோளை சீனா வெற்றிக்கரமான விண்ணில் ஏவியது.

ஜிச்சாங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் -3 பி கேரியர் ராக்கெட் மூலம் ஆப்ஸ்டார் 6டி(APSTAR-6D)என்ற வணிக தொலைதொடர்பு செயற்கைக்கோள், திட்டமிட்ட சுற்றுப்பாதைக்கு அனுப்பப்பட்டது.

சீனாவின் முதல் உலகளாவிய உயர்-செயல்திறன் பிராட்பேண்ட் செயற்கைக்கோளான ஆப்ஸ்டார் 6டி, சுமார் 5 ஆயிரத்து 550 கிலோ எடைகொண்டது .இதன் ஆயுள்காலம் 15 ஆண்டுகள் என விஞ்ஞானிகள் தெரிவித்தள்ளனர். இந்த செயற்கைக்கோளை சீனா அகாடமி ஆஃப் ஸ்பேஸ் டெக்னாலஜி உருவாக்கியுள்ளது.

சர்வதேச வாடிக்கையாளர்களுக்காக இதுவரை 11 வணிக தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments