மீனவர்களின் போராட்டத்தின்போது காவல்துறை ஆய்வாளரின் மண்டை உடைப்பு

0 1404

தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை மற்றும் அதிவேக சீன இஞ்சின் விசைப் படகுகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் காவல்துறை ஆய்வாளரை தாக்கியதில் அவர் மண்டை உடைந்தது.

சில கிராம மீனவர்களால் தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தப்படுவதால் மீன்வளம் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரம் முடங்கியுள்ளதாக கூறி மனிதச்சங்கிலி மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட 22 கிராமங்களை சேர்ந்த 2000 மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளையும் முற்றுகையிட்டனர்.

இந்நிலையில் சந்திரப்பாடி கிராமத்தில் சுருக்குவலைக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை தாக்குவதற்காக புறப்பட்ட இளைஞர்களை தடுத்து நிறுத்த முயன்ற இன்ஸ்பெக்டர் செல்வத்தை மீனவ இளைஞர்கள் தாக்கியதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.

பதற்றம் தொடரும் நிலையில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வரத்தினம் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனிடையே மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments