சென்னையில் விரைவில் பிளாஸ்மா வங்கி..!

0 1522

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் விரைவில் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்துப் பாதிக்கப்பட்டோருக்குச் செலுத்தி எதிர்ப்பாற்றலை உருவாக்கும் முறை பிளாஸ்மா சிகிச்சை ஆகும்.

இந்தப் பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனா நோயாளிகள் பலர் குணமடைந்து வருகின்றனர். இதனால் பிளாஸ்மா சிகிச்சையை ஊக்கப்படுத்தும் வகையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் விரைவில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட உள்ளது.

கொரோனாவில் இருந்து குணமானவர்கள் தாமாக முன்வந்து இங்கு பிளாஸ்மா தானம் செய்யலாம். இதுவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 25 பேருக்கும் மதுரை, திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் இருவருக்கும் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments