பாகிஸ்தான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை..!

0 6028

பாகிஸ்தான் இன்டர்நேசனல் ஏர்லைன்ஸ் விமானங்கள் தனது  வான்பரப்பில் பறக்க அமெரிக்கா தடை விதித்துள்ளது.

மே மாதத்தில் பாகிஸ்தான் இன்டர்நேசனல் ஏர்லைன்சின் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 97 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானில் விமானிகளாகப் பணியாற்றி வந்தோரில் மூன்றில் ஒரு பங்கினர் உரிய கல்வித் தகுதி இல்லாதவர்கள் எனத் தெரியவந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

கொரோனா சூழலில் அமெரிக்காவில் தவிக்கும் பாகிஸ்தான் நாட்டவரைத் திருப்பி அழைத்துச் செல்லச் சிறப்பு விமானங்களை இயக்க அமெரிக்கப் போக்குவரத்துத் துறை அனுமதி அளித்திருந்தது. பாகிஸ்தான் விமானிகளின் தகுதி பற்றி அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாக அமைப்பு கவலை தெரிவித்ததையடுத்து, முன்பு அளித்த சிறப்பு அனுமதியை அமெரிக்கா திரும்பப் பெற்றுக்கொண்டது. இதேபோல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பாகிஸ்தான் இன்டர்நேசனல் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு 6 மாதத்துக்குத் தடை விதித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments