சென்னையில் குறையும்.. கொரோனா பாதிப்பு..!

0 10718

சென்னையில் 15 மண்டலங்களிலும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை வடசென்னையை விட மத்திய சென்னை, தென்சென்னையில் அதிகமாக உள்ளது.

சென்னையில் கடந்த 7 நாட்களில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக 5 புள்ளி 2 விழுக்காடு குறைந்துள்ளது.

வடசென்னையின் ராயபுரம் மண்டலத்தில் 9 ஆயிரத்து 369 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் எட்டாயிரத்து ஏழு பேரும் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இராயபுரம் மண்டலத்தில் 81 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளதால், ஆயிரத்து 582 பேர் தற்போதைய நோயாளிகளாக உள்ளனர்.

தண்டையார்பேட்டையில் 79 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளதால் ஆயிரத்து 522 பேர் தற்போதைய நோயாளிகளாக உள்ளனர். இதேபோல் வடசென்னை மண்டலங்களான திருவொற்றியூரில் 956 பேரும், மணலியில் 396 பேரும், மாதவரத்தில் 712 பேரும், திரு.வி.க.நகரில் ஆயிரத்து 538 பேரும் தற்போதைய நோயாளிகளாக உள்ளனர். அதேநேரத்தில் மத்தியச் சென்னையிலும், தென் சென்னையிலும் உள்ள மண்டலங்களில் குணமடைந்தோரின் விகிதம் வடசென்னையை விடக் குறைவாக இருப்பதால், தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

மத்திய சென்னைக்குட்பட்ட கோடம்பாக்கம் மண்டலத்தில் இரண்டாயிரத்து 553 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் இரண்டாயிரத்து 36 பேரும், அண்ணாநகர் மண்டலத்தில் இரண்டாயிரத்து 236 பேரும் தற்போதைய நோயாளிகளாக உள்ளனர். இதனால் மத்தியச் சென்னையிலும் தென்சென்னையிலும் பாதிப்பைக் கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments