கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா

0 6234

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஏற்கெனவே அமைச்சர்கள் தங்கமணி, கே.பி. அன்பழகன் ஆகியோருக்கு கொரோனா உறுதியாகியிருந்தது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு லேசான காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி இருந்ததால், மியாட் மருத்துவமனையில் சென்று கொரோனா பரிசோதனை எடுத்துக் கொண்டார். இதில் அவருக்கு கொரோனா இருப்பது இன்று உறுதியானது. இதைத் தொடர்ந்து மியாட் மருத்துவமனையில் அமைச்சர் செல்லூர் ராஜூ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். முன்னதாக செல்லூர் ராஜூவின் மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செல்லூர் ராஜூவுக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர் விரைவில்  பூரண குணமடைந்து மக்கள் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதாக ட்விட்டரில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், செல்லூர் ராஜூவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவர் விரைவில் நலம் பெற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments