தணிகாச்சலத்திற்கு நிபந்தனை ஜாமீன்..!

0 6601

சித்தமருத்துவர்  என தம்மை கூறிக் கொண்ட தணிகாச்சலத்திற்கு  நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு அருகே, எந்தவித மருத்துவ தகுதிச் சான்றும் இன்றி மருத்துவமனை நடத்தி வந்தவர் தணிகாச்சலம். இவர் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக கூறியதுடன், அது குறித்து சமூக வலைதளங்களில் போலிப் பிரச்சாரம் உள்ளிட்டவற்றை நடத்துவதாக தமிழக இந்திய-ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குநர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில்  மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த மே மாதம் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் இரண்டு வழக்குகளில் கைது செய்து செய்யப்பட்ட பின்னர் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் முதல் வழக்கில் அவருக்கு சென்னையைவிட்டு செல்லக்கூடாது எனும்  நிபந்தனையுடன்  ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments