சசிகலா இல்லாமல் அதிமுக ஆட்சியை நடத்துவது தான் எங்கள் முடிவு - அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

0 12232

சசிகலாவும் அவருடைய குடும்பத்தாரும் இல்லாமல் கட்சியும் ஆட்சியும் நடத்துவது தான் அதிமுகவின் முடிவு என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் காணொலியில் நடைபெற்ற தேசிய மீன் வளர்ப்போர் தினக் கருத்தரங்கில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா குறித்து கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியது அவரது சொந்தக் கருத்து எனக் குறிப்பிட்டார். அதிமுகவின் நிலைப்பாடு நேற்று, இன்று, நாளை என்றுமே ஒன்று தான் என்றும், சசிகலாவும், அவருடைய குடும்பத்தாரும் இல்லாமல் கட்சியும் ஆட்சியும் நடத்துவது தான் அந்த நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments