நீலகிரி மாவட்டம் உதகையில் 447 கோடி ரூபாய் செலவில் மருத்துவக் கல்லூரி... முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்..!

0 3333

நீலகிரி மாவட்டத்தில் 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய மருத்துவக் கல்லூரிக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலியில் அடிக்கல் நாட்டியுள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 10 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், 11ஆவதாக நீலகிரி மாவட்டத்தில் 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரிக்குச் சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

புதிதாக அமைக்கப்படும் 11 மருத்துவக் கல்லூரிகளிலும் ஆயிரத்து 650 எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு இடங்கள் கிடைக்கும். இதனால் தமிழகத்தில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்து 250 ஆக அதிகரிக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments