நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து இதுவரை 4,95,513 பேர் குணம்

0 2380

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 26,506 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை தனது இணையதளத்தில் வெளியிட்ட புள்ளி விவரத்தில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 475 பேர் பலியானதாகவும், 26,506 பேர் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 93 ஆயிரத்து 802 ஆகவும், கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 604ஆகவும் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு 2 லட்சத்து 76 ஆயிரத்து 685 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 4 லட்சத்து 95 ஆயிரத்து 513 பேர் குணமாகியுள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 599ஆகவும், பலி எண்ணிக்கை 9 ஆயிரத்து 667ஆகவும் அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments